நடிகர் சிம்பு pt desk
தமிழ்நாடு

“மத்தவங்க யோசிப்பாங்க; ஆனா இந்தியன் 2-க்கு அனிருத் தைரியமா ஓகே சொல்லி வந்திருக்கார்” - சிம்பு பேச்சு

webteam

சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் இந்தியன் 2 படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நேற்று நடைபெற்றது. இதில், இயக்குநர் ஷங்கர், நடிகர் கமல்ஹாசன், இசையமைப்பாளர் அனிருத் உள்ளிட்டோர் பங்கேற்றனர். நிகழ்ச்சியில் நடிகர் சிம்புவும் கலந்து கொண்டு பேசினார்.

அப்போது பேசிய அவர்... “ரொம்ப சந்தோஷமா இருக்கு. லேட்டா வந்தானு நினைச்சுகாதீங்க. தக் லைஃப் ஷூட்டிங்ல இருந்து வந்தேன் அதுதான். இந்தியன் படம் பத்தி முதல்ல சொல்லணும். இந்தியன் என் குளோஸ் டூ ஹார்த். ஷங்கர் சார்கிட்ட அடிக்கடி சொல்லியிருக்கேன். ஒரு படத்துக்கான கமெர்ஷியல் ஸ்ரெக்சர் கொடுத்த படம் இந்தியன். சுஜாதா சார் ஜீவா சார்.. ரஹ்மான் சார் மியூசிக் எல்லாமே நம்ம பேவரைட். இந்தப் படம் பார்ட் 2 வரப்போதுனு கேள்விப்பட்ட போதே எக்ஸைட் ஆனேன்.

Anirudh AR Rahman

கமல் சார் என் குரு. எங்க அப்பா கேமரா பின்னாடி குரு. இப்போ கமல் சார் கூட சேர்ந்து நடிக்கிற வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதை பத்தி வேற மேடையில பேசுறேன். இவ்வளவு நாளா ஆனாலும் மக்களுக்கு ஏதாவது கொடுக்கணும்னு பண்ணிட்டே இருக்கார்.

ஷங்கர் சார் நம்ம எல்லோருக்கும் பிடிக்கிற மாதிரிதான் இந்தியன் 2 எடுத்திருப்பார். இந்த டைம்ல மூணு படத்தில் ஷங்கர் சார் பண்ணியிருக்குறது பெரிய விஷயம்.

பெரிய படங்களை நம்பி எடுக்க நிறைய தயாரிப்பாளர்கள் இல்ல. லைகாவுக்கு வாழ்த்துகள். ரஹ்மான் சார் மியூசிக் இப்போ வரைக்கு மறக்க முடியாது. எந்த மியூசிக் டைரக்டர் கிட்ட இந்தியன் 2 கேட்டிருந்தா எஸ் சொல்லியிருக்க மாட்டாங்க. அனிருத் தைரியமா ஓகே சொல்லி வந்திருக்கார்.

ரெட் ஜெயண்ட் பெரிய படம் மட்டும் இல்லாம எல்லா படத்துக்கும் ஹெல்ப் பண்றாங்க. நன்றி. இந்தியன் 2 ட்ரெய்லர் வெற்றி. பான் இந்தியானு பேசுறோம். ஆனா இந்தியன் ஆக்டர்னான கமல் சார்தான். கமல் சாருக்கு பொருத்தமான டைட்டில் இந்தியன். இந்தியன் என்றால் பெருமை இல்ல ஒற்றுமை.

Kamal

கமல் சார்கூட நடிக்கும் போது வசனம் எதுவும் மனசுல இல்ல. அவரையே பார்த்துட்டு இருந்தேன். கமல் சாருக்கு விஸ்வரூபம் டைம்ல பிரச்னை வந்தப்போ ஓடி போய் நின்னேன். என்னால எதுவும் செய்ய முடியலனாலும் கூட நிக்கணும்னு ஓடிட்டேன்” என்றார்.