தமிழ்நாடு

"பயங்கரவாதத்தை ஒடுக்க இணைந்து செயல்படுவோம்" - இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கை

"பயங்கரவாதத்தை ஒடுக்க இணைந்து செயல்படுவோம்" - இந்தியா - அமெரிக்கா கூட்டறிக்கை

கலிலுல்லா

சர்வதேச அளவில் பயங்கரவாதத்தை ஒடுக்குவதில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும் என இரு நாடுகளும் இணைந்து கூட்டாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்திருக்கின்றன.

பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனை சந்தித்துப் பேசினார். இதன் பின் இரு நாடுகளும் இணைந்து கூட்டறிக்கை வெளியிட்டுள்ளன. இதில் பயங்கரவாதத்தை கூட்டாக எதிர்ப்பது, மும்பை பயங்கரவாத தாக்குதல் குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்த நடவடிக்கை எடுப்பது ஆகியவற்றில் இணைந்து செயல்பட உறுதிபூண்டுள்ளதாகவும் கூட்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

மேலும் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒடுக்குவதற்கான நடவடிக்கைகளையும் மேற்கொள்ள இணங்கியுள்ளதாகவும் கூட்டறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் நிரந்தர இடம் பெறவும் அணுஆயுத வினியோக குழு நாடுகளில் சேர்க்கவும் இந்தியாவிற்கு உதவுவதாக மோடியிடம் பைடன் உறுதியளித்துள்ளதாகவும் கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.