தமிழ்நாடு

இந்தியா டுடே மாநாடு சென்னையில் தொடங்கியது

webteam

இந்தியா டுடே குழுமத்தின் இரண்டு நாள் மாநாடு சென்னையில் தொடங்கியது.

அரசியல், பொருளாதாரம், கலை, கலாசாரம் மற்றும் விளையாட்டுத் துறைகள் தொடர்பாக மாநாட்டில் கருத்தரங்குகள், உரைகள் இடம்பெறுகின்றன. தென்னிந்தியாவில் முதல்முறையாக சென்னையில் நடைபெறும் இந்த மாநாட்டை, அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் புகைப்படக் கண்காட்சியை சசிகலா தொடங்கி வைத்தார்.மாநாட்டில் இந்தியா டுடே குழுமத்தின் தலைவர் அருண் பூரி வரவேற்புரை நிகழ்த்தினார்.

தமிழக முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டில் தொடக்கவுரை ஆற்றினார். சட்டம் ஒழுங்கு பராமரிப்பில் சிறந்து விளங்கும் தமிழகம், தொழில் தொடங்குவதற்கு ஏற்ற மாநிலமாக திகழ்வதாக அவர் குறிப்பிட்டார். நாளை வரை நடைபெறும் மாநாட்டில், கர்நாடகா, ஆந்திரா, தெலுங்கானா, கேரளா மற்றும் புதுச்சேரி முதலமைச்சர்கள் பங்கேற்றுப் பேசவுள்ளனர். கலைத் துறை சார்பில் கமல்ஹாசன் பங்கேற்று உரையாற்ற உள்ளார்.