தமிழ்நாடு

‘பால் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்’ - கனிமொழி கண்டனம்

‘பால் விலை உயர்வு மக்களை கடுமையாக பாதிக்கும்’ - கனிமொழி கண்டனம்

webteam

அத்தியாவசியப் பொருளான பாலின் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் கூடுதலாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் ஆவின் பால் விலையை உயர்த்தி தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பாலின் கொள்முதல் விலையையும் உயர்த்தி தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. பசும்பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 4 உயர்த்தி ரூ.32 ஆகவும், எருமைப் பால் கொள்முதல் விலை லிட்டருக்கு ரூ. 6 உயர்த்தி 41 ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. பால் கொள்முதல் விலை மற்றும் விற்பனை விலை உயர்வு நாளை மறுநாள் முதல் அமலுக்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்நிலையில், அத்தியாவசியப் பொருளான பாலின் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் கூடுதலாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது என திமுக எம்பி கனிமொழி தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கனிமொழி, ''அத்தியாவசியப் பொருளான பாலின் விலையை லிட்டருக்கு 6 ரூபாய் கூடுதலாக உயர்த்தியிருப்பது கடும் கண்டனத்துக்குரியது.

இந்த விலை உயர்வானது மக்களை கடுமையாக பாதிக்கும் என்பதால், ஆளும் அதிமுக அரசு இதை  உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்'' என குறிப்பிட்டுள்ளார் 

அதேபோல் பால் விலை உயர்வுக்கு கண்டனம் தெரிவித்து மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார். அதில், பால் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வில் பெரும் சுமை. தரமான பால் விநியோகத்தை உறுதி செய்யவே இந்த விலை உயர்வு என்று அரசு கூறுகிறது. தரமான விநியோகம் என்பது அரசின் கடமையல்லவா? கடமை தவறிய அதிமுக அரசு, சுமையை மக்கள் தலையில் போடுவது சரியா? என குறிப்பிட்டுள்ளார்