தமிழ்நாடு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து‌ குறைந்தது: சாகுபடிக்காக 15,000 கனஅடி நீர்திறப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து‌ குறைந்தது: சாகுபடிக்காக 15,000 கனஅடி நீர்திறப்பு

webteam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ள நிலையில், அணையின் நீர்மட்டம் 87 அடியாக இருக்கிறது.

கர்நாடகாவில் பெய்த கனமழை காரணமாக, மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்து அணையின் நீர்மட்டம் கடந்த 16ஆம் தேதி 98 அடி வரை சென்றது. இந்நிலையில், தற்போது அணைக்கு நீர்வரத்து ஆயிரத்து 656 கன அடியிலிருந்து ஆயிரத்து 401 கன அடியாகக் குறைந்துள்ளது. தற்போது அணையில் 49.39 டி.எம்.சி நீர் இருப்பு உள்ள‌ நிலையில், சம்பா சாகுபடிக்காக அணையிலிருந்து 15 ஆயிரம் கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.

மேலும், வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் மலை சரிவுகளில் அமைந்துள்ள அணைகள் மற்றும் அணையின் நீர்மின் நிலையங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் நடைபெற்று வருகின்றன. இதன்படி, கோவை மாவட்டம் பில்லூர் அணையில் ஆய்வு நடத்தி கண்காணிப்பு பணிகள் நடந்து வருகின்றன.