வடகிழக்கு பருவமழை தொடங்கியது pt web
தமிழ்நாடு

முன்கூட்டியே தொடங்கியது வடகிழக்கு பருவமழை.. அதிகாரப்பூர்வமாக அறிவித்தது வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியது என அதிகாரப்பூர்வமாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

PT WEB

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதாக வானிலை ஆய்வு மையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி, கடலோர ஆந்திரா, தெற்கு கர்நாடகா, கேரளாவில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளது. இந்தியாவில் இருந்து தென்மேற்கு பருவமழை முற்றிலுமாக விலகியுள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாற்றம்

பொதுவாக அக்டோபர் மாத இறுதியில்தான் வடகிழக்கு பருவமழை தொடங்குவதாக அறிவிப்பார்கள். நவம்பர், டிசம்பர் மாதங்களில் அதிக மழைகொடுக்கும் பருவமாக வடகிழக்கு பருமழை இருக்கும்.

ஒட்டுமொத்த இந்தியாவும் தென்மேற்கு பருவமழையின் மூலம் அதிக மழையைப் பெறும் சூழலில் தமிழ்நாடு மட்டும் கிட்டத்தட்ட 60%க்கும் அதிகமான மழையை வடகிழக்கு மழையின் மூலம் பெறும். இந்நிலையில்தான், 5 நாட்களுக்கு முன்பாகவே வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதாக அறிவித்துள்ளது வானிலை ஆய்வு மையம்.

மழை

வடகிழக்கு பருவமழையில் தமிழ்நாடு பொதுவாக பெறும் மழையின் அளவு 44 செமீ. ஆனால், இந்தாண்டு இயல்பை விட நூறு சதவீதத்திற்கும் அதிகமாக மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வடகிழக்கு பருமழை முன்பாகவே தொடங்குவதற்கு காரணம், தற்போது உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதிதான் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.