வடகிழக்கு பருவமழை தமிழகத்தில் தீவிரமடைந்து வரும் சூழலில் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் கனமழை யெய்து வருகிறது.
இந்நிலையில், தமிழகத்தின் 14 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, திண்டுக்கல், தேனி, தென்காசி, நெல்லை, கன்னியாகுமரி போன்ற மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல, திருப்பூர், கரூர், திருச்சி, தஞ்சை, நாமக்கல், புதுக்கோட்டை, நாகை, மயிலாடுதுறை போன்ற மாவட்டங்களிலும் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. சென்னையின் ஒரு சில இடங்களிலும் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.