தமிழ்நாடு

தமிழகத்தில் பல இடங்களில் போராட்டம் வாபஸ்

webteam

தமிழகம் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக இளைஞர்கள் நடத்தி வந்த போராட்டம் பல இடங்களில் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

தமிழகத்தின் முழுவதும் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக பல்வேறு தரப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். ஜல்லிக்கட்டுக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என்று கோரி இளைஞர்கள் தன்னெழுச்சியாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்நிலையில், காட்சிப்படுத்தப்படக் கூடாத விலங்குகள் பட்டியலில் இருந்து காளைகளை நீக்கி தமிழக அரசு அவசரச் சட்டம் பிறப்பித்தது. இந்த சட்டத்தின் மூலம் ஜல்லிக்கட்டு போட்டிகளுக்கான தடை நீங்கியதாக தமிழக அரசு அறிவித்தது.

ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர். இதனையடுத்து நாமக்கல், திண்டுக்கல், பெரம்பலூர், திருவாரூர், தேனி, நெல்லை, திருப்பூர், திருத்தணி, திருச்சி, விழுப்புரம், தஞ்சாவூர் ஆகிய இடங்களில் போராட்டத்தை வாபஸ் பெறுவதாக போராட்டக்காரர்கள் தெரிவித்துள்ளனர்.