தமிழ்நாடு

கோவை அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது

கோவை அருகே மக்களை அச்சுறுத்தி வந்த சிறுத்தை பிடிபட்டது

JustinDurai

கோவை குனியமுத்தூரில் கிடங்குக்குள் புகுந்து 5 நாட்களாக பொது மக்களுக்கு அச்சுறுத்தலாக இருந்த வந்த சிறுத்தை வனத்துறையினர் வைத்த கூண்டுக்குள் சிக்கியது.

குனியமுத்தூர் பகுதியில் உள்ள கிடங்கு ஒன்றில் சிறுத்தை புகுந்ததாக, கடந்த திங்கட்கிழமை வனத்துறைக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அங்கு முகாமிட்ட வனத்துறையினர், கிடங்கையும் அதனை சுற்றியுள்ள பகுதியையும் தங்கள் கட்டுப்பாடுக்குள் கொண்டு வந்தனர். சிறுத்தையை பிடிக்க கூண்டு அமைத்த அவர்கள், அதனுள் இறைச்சியையும் தண்ணீரையும் வைத்தனர். ஆனால் சுதாரித்துக் கொண்ட சிறுத்தை 4 நாட்களாக இறைச்சியை உண்ண கூண்டுக்குள் செல்லாமல் போக்கு காட்டி வந்தது.

இந்நிலையில், நேற்றிரவு அந்த சிறுத்தை கூண்டினுள் பிடிபட்ட நிலையில், அதனை அடர் வனப்பகுதியில் விடுவிக்கும் நடவடிக்கையில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கடந்த ஒன்றரை மாதங்களாகவே தங்கள் பகுதியில் சுற்றி வந்த சிறுத்தை பிடிபட்டுள்ளதால் அப்பகுதி மக்கள் நிம்மதியடைந்துள்ளனர்.