தமிழ்நாடு

‘லைசென்ஸ் சோதனைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்’ - திருப்பி அனுப்பிய ஆர்டிஓ

‘லைசென்ஸ் சோதனைக்கு ஜீன்ஸ் அணிந்து வந்த பெண்’ - திருப்பி அனுப்பிய ஆர்டிஓ

webteam

ஜீன்ஸ் பேன்ட் அணிந்து சென்றதால் ஒட்டுநர் உரிம சோதனைக்கு பெண் ஒருவர் அனுமதிக்க படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சென்னை கேகே நகர் ஆர்டிஓ அலுவலகத்தில் பெண் ஒருவர் வாகன ஓட்டுநர் உரிமம் எடுக்க சென்றுள்ளார். அப்போது அவர் ஜீன்ஸ் பேன்ட் மற்றும் ஸ்லீவ்லஸ் டாப் உடை அணிந்து சென்றுள்ளார். ஓட்டுநர் உரிமத்திற்கான சோதனைக்கு சென்ற போது அப்பெண்ணை இந்த உடையுடன் சோதனையில் ஈடுபடக் கூடாது என்று ஆர்டிஓ அதிகாரி தடுத்துள்ளதாக தெரிகிறது. இதனைத் தொடர்ந்து அந்தப் பெண் மீண்டும் வீடு திரும்பி அந்தப் பெண் தனது உடையை மாற்றி வந்து ஓட்டுநர் உரிம சோதனையில் பங்கேற்று உள்ளார்.

இது தொடர்பாக அந்தப் பெண் ‘டைம்ஸ் ஆஃப் இந்தியா’ நாளிதழக்கு பேட்டி அளித்துள்ளார். அதில், “நான் ஜீன்ஸ் மற்றும் டாப்ஸ் அணிந்து இருந்ததால் ஓட்டுநர் உரிமம் சோதனையில் பங்கேற்க ஆர்டிஓ அதிகாரி அனுமதிக்கவில்லை. எனவே நான் மீண்டும் வீட்டிற்கு சென்று சல்வார் கமீஸ் உடை அணிந்து வந்து ஓட்டுநர் உரிமம் சோதனையில் பங்கேற்றேன்” எனத் தெரிவித்துள்ளார். 

இதே ஆர்டிஓ அதிகாரி ஏற்கெனவே கடந்த 10 நாட்களுக்கு முன்பு, கல்லூரி மாணவி ஒருவர் கேப்ரி உடை அணிந்து வந்ததால் அந்தப் பெண்ணையும் ஓட்டுநர் உரிமம் சோதனைக்கு அனுமதிக்க மறுத்தது குறிப்பிடத்தக்கது.