நீந்தி சென்று அடக்கம் செய்யும் அவலம் pt web
தமிழ்நாடு

கடலூர் | இறந்தவரின் உடலை ஆற்றில் நீந்தி சென்று அடக்கம் செய்யும் அவல நிலை! மனதை உருக்கும் காட்சிகள்!

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீரசோழபுரம் கிராமத்தில் ஆபத்தான முறையில் இறந்தவரின் உடலை நீந்தி சென்று அடக்கம் செய்ய வேண்டிய அவல நிலை.

PT WEB

செய்தியாளர் கே.ஆர். ராஜா

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே வீரசோழபுரம் எனும் கிராமம் உள்ளது. இந்த ஊரில் 150 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

இந்த கிராமத்தில் உள்ளவர்களில் யாரேனும் இறந்து விட்டால், இறந்தவரை இடுகாட்டுக்கு கொண்டு செல்ல, அப்பகுதி மக்கள் இறந்தவரை சுமந்து கொண்டு ராஜன் வாய்க்காலில் நீந்திச் செல்ல வேண்டியுள்ளது. பல ஆண்டுகளாக இம்முறையிலேயே இடுகாட்டுக்குச் சென்று அடக்கம் செய்து வருகின்றனர்.

இதற்கிடையே இடுகாட்டுக்கு செல்வதற்கு ராஜன் வாய்க்காலில் பாலம் கட்டித் தர வேண்டுமென பல ஆண்டுகளாக தொடர்ந்து ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளிடம் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். இதுவரை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

இந்நிலையில், அதே கிராமத்தில் வசித்து வரும் முதியவர் கலியமூர்த்தி (92) என்பவர் வயது மூப்பு காரணமாக இறந்து விட்டார்.

அவரை ஊர் மக்கள், ராஜன் வாய்க்காலில் நீந்தி உயிரை பனையம் வைத்து இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்றனர். மேலும் இந்த கிராமத்தில் யாராவது இறந்தால் அவரது உடலை வாழை மட்டையை பயன்படுத்தி தண்ணீரில் இடுகாட்டுக்கு கிராம மக்கள் கொண்டு செல்கின்றனர்.

எனவே மாவட்ட நிர்வாகம் இந்த கிராம மக்களின் நலன் கருதி ராஜன் வாய்க்காலின் குறுக்கே புதிய பாலம் அமைத்து தர வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.