வி.சாலை மாநாட்டிற்கு பின் தவெக தலைவர் விஜய் இன்று முக்கிய ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை அமைந்தகரையில், வீட்டில் பணிபுரிந்த 14 வயது சிறுமி கொல்லப்பட்ட விவகாரத்தில் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கன்னியாகுமரி, நீலகிரி, தேனி மாவட்டங்களில் பரவலாக கனமழை பெய்து வருகிறது. அதிகபட்சமாக கொட்டாரத்தி 15 புள்ளி 8 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
தேனி கீழவடகரையில் விளைநிலங்கள் மூழ்கின. இதனால், நெற்பயிற்கள் அழுகின. உபரிநீர் வெளியேறும் பகுதியை உயர்த்தியதால் இந்த நிலை என விவசாயிகள் வேதனை.
மேட்டுப்பாளையம் - உதகை இடையேயான மலை ரயில் போக்குவரத்து இன்று ரத்து. தண்டவாளத்தில் பாறை விழுந்து சேதமடைந்ததால் மீட்பு பணி தீவிரம்.
தொடர் விடுமுறை முடிந்து சென்னை திரும்ப பேருந்து நிலையங்களில் குவியும் மக்கள்... சேலம் ஆத்தூரில் 4 மணி நேரத்திற்கு மேலாக முன்பதிவுக்காக காத்திருக்கும் பயணிகள்.
இந்தியாவில் தொடர்ந்து விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்படுவதால், சேவைகள் பாதிக்கப்படுகின்றன. இதையடுத்து வெளிநாடுகளின் உதவியை நாடியுள்ளது மத்திய அரசு.
இந்தியாவில் புதிய உச்சத்தை தொட்டுள்ளது அரிசி கையிருப்பு அளவு. இதுவரை இல்லாத அளவாக 300 லட்சம் டன் அரிசி இருப்பிலுள்ளதாக உணவு கழகம் அறிவிப்பு.