மழை PT web
தமிழ்நாடு

இன்று 8 மாவட்டங்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

PT WEB

தமிழ்நாட்டில் இன்று 8 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி உருவாகியுள்ளது. இந்த வளிமண்டல கீழடுக்கு சுழற்சியின் காரணமாக தென்மேற்கு வங்கக்கடலில் 14 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி மேலும் தீவிரமடைந்து தமிழகத்தை நோக்கி நகருவதற்கான வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை மாநகரின் பல்வேறு இடங்களில் மழை!

அதுமட்டுமின்றி அரபிக்கடல் பகுதியில் நிலவும் காற்றழுத்த தாழ்வுப்பகுதி நாளை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கோவை, நீலகிரி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர் என 8 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

rain

அக்டோபர் 14, 15, 16 என மூன்று நாட்கள் தமிழகத்திற்கு ஆரஞ்ச் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 14 ஆம் தேதி விழுப்புரம், கடலூர் போன்ற மாவட்டங்களிலும், 15 ஆம் தேதி செங்கல்பட்டு, திருவள்ளூர், சென்னை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களிலும் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. 16 ஆம் தேதி வேலூர், ராணிப்பேட்டை திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.