ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக உருமாற்றம் pt web
தமிழ்நாடு

"காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும்" - இந்திய வானிலை ஆய்வு மையம்

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

PT WEB

தென்கிழக்கு வங்கக் கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப்பகுதி காரணமாக வடமாவட்டங்களில் மழை அதிகரிக்க வாய்ப்புள்ளதாக கணிக்கப்பட்டுள்ளது. இது மேலும் வலுவடைந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து வட தமிழகத்தை நோக்கி நகரும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு முழுவதுமும் புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட இடங்களிலும் அதிகனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது. இதே போல டெல்டா மாவட்டங்களிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.