டானா புயல் புதிய தலைமுறை
தமிழ்நாடு

வங்கக் கடலில் உருவாகிறது ’டானா’ புயல்; எங்கே கரையை கடக்கும்? - வானிலை ஆய்வு மையம் கொடுத்த ரிப்போர்ட்

வடகிழக்கு பருவமழை ஐந்து நாட்களுக்கு முன்பாகவே தொடங்கியிருக்க கூடிய சூழலில், வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் வரும் 23 ஆம் தேதி உருவாக இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

ஜெனிட்டா ரோஸ்லின்

வடகிழக்கு பருவமழை ஐந்து நாட்களுக்கு முன்பாகவே தொடங்கியிருக்க கூடிய சூழலில், வடகிழக்கு பருவமழையின் முதல் புயல் வரும் 23 ஆம் தேதி உருவாக இருக்கிறது என்று வானிலை ஆய்வு மையம் அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

வங்கக்கடலில் இருக்கக்கூடிய வளிமண்டல சுழற்சி,தீவிர மடைந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக, 24 மணி நேரத்தில் மத்திய கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டியுள்ள வடக்கு அந்தமான் பகுதிகளில் வலுப்பெற இருக்கிறது. அதன்பிறகு மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து,மேலும் வழுவடைந்து காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வரும் 22 ஆம் தேதி காலையிலும், அதன்பிறகு மேலும் வழுவடைந்து 23 ஆம் தேதி மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதியில் புயலாக வலுப்பெறும்.

இப்புயலுக்கு DANA என்று பெயரிடப்பட்டுள்ளது.. இது கத்தார் நாட்டினால் பரிந்துரைக்கப்பட்ட பெயர்..வடகிழக்கு பருவமழை தொடங்கியிருக்க கூடிய சூழலில், வங்கக்கடலில் உருவாகியுள்ள முதல் புயல் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த புயல் தமிழகத்தை நோக்கி வருமா?

அக்டோபர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை பொழியும் வடகிழக்கு பருவமழை காலத்தில், தமிழகம் 60% முதல் 70% வரை மழை பெறுகிறது. வடகிழக்கு பருவமழையால் தமிழகம் 60% மேல் மழைப்பொழிவை பெறும்.. மேலும், இக்காலத்தில் இந்தியாவில் ஆந்திரா, தமிழகம், புதுவை ஆகிய மாநிலங்கள் மற்றும் இலங்கையின் கிழக்கு கரையோர பகுதிகளில் மழை பொழிவு இருக்கும். இதனால், உருவாகக்கூடிய புயல்களும் பெரும்பாலும் தமிழகத்தை நோக்கிதான் வரும்.

ஆனால், தற்போது உருவாகப்போகிற இந்த தானா புயலின் காற்றின் திசை என்பது, வடமேற்கு திசையில் நகர்ந்து ஒடிசா, மேற்கு வங்கத்தை நோக்கி செல்லும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.. இதன்மூலம், தமிழகத்தை நோக்கி இப்புயல் வருவதற்கான சாத்தியம் இல்லை என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.