தமிழகத்தில் மழைக்கு வாய்ப்பு (கோப்புப் படம்) pt web
தமிழ்நாடு

சம்பவம் இருக்கு... நவம்பரில் இயல்பை விட அதிக மழைக்கு வாய்ப்பு.. வானிலை ஆய்வு மையம் கணிப்பு

தென்னிந்திய பகுதிகளில் இந்த ஆண்டு இயல்பைவிட அதிகமான மழை நவம்பரில் பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

PT WEB

செய்தியாளர் வேதவள்ளி

தமிழ்நாடு உட்பட தென் மாநிலங்களில் நவம்பரில் இயல்பை விட 123% அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாடு, காரைக்கால், ஆந்திரா பகுதிகளில் பருவமழை இயல்பை விட அதிகமாக பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தால் நவம்பர் மாதத்திற்கான மாதாந்திர வானிலை முன்னறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அதில், தென்னிந்திய பகுதிகளான தமிழ்நாடு, காரைக்கால், கடலோர ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பகுதிகளில் வடகிழக்கு பருவமழை நவம்பர் மாதத்தில் இயல்பை விட அதிகமாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் முதல் வாரத்தில் இயல்பான அளவிலேயே மழைப்பொழிவு இருக்கும்; சில இடங்களில் இயல்புக்கு குறைவாக இருக்கும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. நவம்பர் 2 ஆவது வாரத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடையும். 123% அதிகமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதாவது இயல்பை விட 23% அதிகமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை

இந்நிலையில் அடுத்தடுத்த சலனங்களும் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனெனில் கடல்சார்ந்த நிகழ்வுகள் எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கக்கூடிய நிலையில், நவம்பர் முதல்வார இறுதியில் உருவாகக்கூடிய அந்த சலனம், அதைத் தொடர்ந்து உருவாகும் சலனங்கள் எல்லாம் நமக்கு சாதகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. குறிப்பாக கடலோர மாவட்டங்கள் இதனால் அதிகப்படியான மழை பெறுவதற்கான வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.