தமிழ்நாடு

கோவை அருகே அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள்... ஆர்டிஐயில் அம்பலம்..!

கோவை அருகே அனுமதியின்றி செயல்படும் செங்கல் சூளைகள்... ஆர்டிஐயில் அம்பலம்..!

Rasus

மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியை ஒட்டிய 5 ஊராட்சிகளில் அனுமதி இல்லாமல் செங்கல் சூளைகள் செயல்படுவது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

கோவை சின்ன தடாகம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்வியில் இத்தகவல் தற்போது தெரியவந்துள்ளது. குறிப்பாக மேற்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய பகுதிகளான சின்ன தடாகம், வீரபாண்டி, 22 நஞ்சுண்டாபுரம், சோமையம்பாளையம், பன்னிமடை ஆகிய 5 ஊராட்சிகளில் செங்கல் சூளைகளின் எண்ணிக்கை, முறையான அனுமதி வழங்கப்பட்டுள்ளதா, என்ன மாதிரியான கண்காணிப்பு மேற்கொள்ளப்படுகிறது என சுமார் 11 கேள்விகள் செங்கல் சூளைகல் தொடர்பாக கேட்கப்பட்டுள்ளது.

(ஆர்டிஐ மனுதாரர் கணேஷ்)

அதில் 10 கேள்விகளுக்கு பதில் அளிக்காத நிலையில், எத்தனை செங்கல் சூளைகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது என கேட்கப்பட்ட கேள்விக்கு செங்கல் சூளைகள் எதுவும் தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் அனுமதி பெறப்படவில்லை என தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாடு வாரியத்தின் கோவை வடக்கு மண்டலம் சார்பில் பதில் அளிக்கப்பட்டுள்ளது.