தமிழ்நாடு

கனவை நிஜமாக்கிய சென்னை இளைஞன் ! ரூ.60 லட்சத்தில் கூகுளில் வேலை 

கனவை நிஜமாக்கிய சென்னை இளைஞன் ! ரூ.60 லட்சத்தில் கூகுளில் வேலை 

webteam

சென்னையை சேர்ந்த ஐஐடி மாணவர் கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 

கணினி அறிவியல் பொறியியல் படிக்கும் மாணவர்களுக்கு எப்போதும் கனவு வேலை என்று கருதப்படுவது கூகுள்,அமேசான், ஃபேஸ்புக் உள்ளிட்ட நிறுவனங்களில் பணிப்புரிவதுதான். அந்த வகையில் சென்னையை சேர்ந்த இளைஞர் ஒருவர் தனது கனவான கூகுளில் வேலைக்கு சேறுவதை நிஜமாக்கியுள்ளார். சென்னையை சேர்ந்தவர் கே.பி.ஷ்யாம். இவர் ஐஐடி-பெங்களூர் கல்லூரியில் 5ஆண்டு எம்டெக் பட்டப்படிப்பு பயின்று வருகிறார். 

இவர் தனது விருப்பத்தால் கூகுள் நிறுவனத்திற்கு வேலை செய்ய விண்ணப்பித்துள்ளார். இதனையடுத்து கூகுள் நிறுவனம் நடத்திய பல வகையான நேர்காணல் சுற்றுகளில் கலந்து கொண்டுள்ளார். இறுதியில் நேர்முக நேர்காணலுக்கு கூகுளின் ஜெர்மனி அலுவலகத்திற்கு சென்றுள்ளார். இத்தனை நேர்காணல்களுக்கு பிறகு இவருக்கு கூகுள் நிறுவனத்தில் வேலை கிடைத்துள்ளது. ஷ்யாமுக்கு ஆண்டு ரூ.60 லட்சம் சம்பளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. 

இதுகுறித்து ஷ்யாம், “நான் எனது சொந்த முயற்சியில் கூகுள் நிறுவனத்திற்கு விண்ணப்பித்திருந்தேன். இந்த நேர்காணலுக்கு என்னுடைய பேராசிரியர்களிடமிருந்து அறிவுரை பெற்றுக் கொண்டேன். இந்த நேர்காணலில் தொழில்நுட்பம் சார்ந்த கேள்விகள் நான் நினைத்தைவிட மிகவும் கடினமாக இருந்தது.” எனத் தெரிவித்துள்ளார். 

கூகுள் நிறுவனத்தில் பணிபுரிய இவர் வரும் அக்டோபர் மாதம் போலந்து நாட்டின் வார்சா பகுதிக்கு செல்லவிருக்கிறார். இவரது தந்தை ஐசிஎஃப் நிறுவனத்தில் பணிபுரிகிறார். மேலும் இவரது தாய் ஒரு அரசு அதிகாரியாக பணியாற்றி வருகிறார்.