டாஸ்மாக் கடை இல்லை என்றால் கள்ளச்சாராயத்தை குடித்து ஏராளமானோர் உயிரிழந்து விடுவார்கள் என வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தெரிவித்துள்ளார்.
திண்டுக்கல்லில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் நிகழ்ச்சியில் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் கலந்துக்கொண்டார். இந்நிகழ்வில் 144 பேருக்கு அம்மா இருசக்கர வாகனமும், திருமண நிதி உதவி மற்றும் தாலிக்கு தங்கம் உள்ளிட்ட நலத்திட்டங்களை வழங்கினார்.
பின்னர் விழாவில் பேசிய அமைச்சர் சீனிவாசன், குடிப்பதினால் ஏராளமான பிரச்னைகள் குடும்பத்தில் வருகிறது. டாஸ்மாக்கை நீங்கள் தானே திறந்து வைக்கிறீர்கள் என பெண்கள் கேட்கிறார்கள். டாஸ்மாக் இல்லை என்றால் கள்ளச்சாராயத்தை குடித்து ஏராளமானோர் உயிரிழந்து விடுவார்கள். இது இக்காலத்து பெண்களுக்கு தெரியாது. குடிக்கிறவர்கள் அவர்களாகத் திருந்த வேண்டும். இருசக்கர வாகனம் வாங்கும் பெண்கள் அனைவரும் ஹெல்மெட் அணிந்து வண்டிகள் ஓட்ட வேண்டும் எனக் கூறினார்