தமிழ்நாடு

ஐஸ்கிரீமில் இதுவா? ஜாக்கிரதை மக்களே!

ஐஸ்கிரீமில் இதுவா? ஜாக்கிரதை மக்களே!

webteam

கோவையில் தனியார் நிறுவன கோன் ஐஸ்-கிரீமில் புழு இருந்ததாக சுகாதாரத்துறை அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டது.

கோவை கணபதி காமராஜபுரம் பகுதியை சேர்ந்த துப்புரவுப் பணியாளர் காளிமுத்து. இவர் மகன் தீபன் சக்ரவர்த்தி. வீட்டின் அருகே தள்ளுவண்டியில் வந்த கோன் ஐஸ்கிரீமை ரூ.25க்கு வாங்கியுள்ளார். அதைப் பிரித்து பார்த்து சாப்பிட்டு கொண்டிருந்தபோது அதில் புழு இருந்தது தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர், அந்த தனியார் நிறுவனத்திடம் சென்று முறையிட்டுள்ளார்.

ஆனால், அவர்கள் முறையாக புகாரை எடுத்துக்கொள்ளாததால் கோவை ரேஸ் கோர்ஸில் உள்ள துணை இயக்குனர் சுகாதார பணிகள் மற்றும் குடும்பநலத்துறை அலுவலகத்தில் சம்மந்தப்பட்ட உணவு பாதுகாப்பு மற்றும் தணிக்கை அதிகாரியிடம் புகார் அளித்தார். புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்ற அதிகாரிகள் உறுதி அளித்ததாகவும் பாதிக்கப்பட்ட காளிமுத்து தெரிவித்தார்.