தமிழ்நாடு

“மனக்குழப்பத்தில் சிலைகளை புதைத்து வைத்தேன்” - கிரண் ராவ்

“மனக்குழப்பத்தில் சிலைகளை புதைத்து வைத்தேன்” - கிரண் ராவ்

webteam

மனக்குழப்பத்தில் சிலை உள்ளிட்ட கலைப்பொருட்களை புதைத்து வைத்ததாக பெண் தொழிலதிபர் கிரண் ராவ் தெரிவித்துள்ளார்.

பழமையான கோயில்களில் இருந்த சாமி சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பாக ஐ.ஜி பொன் மாணிக்கவேல் தலைமையிலான சிலைக்கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். அதிரடி சோதனையில் பல்வேறு இடங்களில் ஏராளமான சாமி சிலைகள் மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் சென்னை தேனாம்பேட்டையில் உள்ள பெண் தொழிலதிபர் கிரண் ராவ் வீட்டில் இருந்து சிலைகள், தூண்கள் உள்ளிட்ட 23 கலைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 

இதுகுறித்து அவர் விளக்கம் அளித்துள்ள கிரண் ராவ், ''அடையாளம் தெரியாத நபர், என்னிடம் இருக்கும் சில சிலைகள் மற்றும் குறிப்பிட்ட தொகையை தரவேண்டும் என தொலைபேசியில் மிரட்டினார். அவர் கூறியபடி செய்யாவிட்டால் தாக்குதல் நடத்துவதுடன், தனது குடும்பத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்துவேன் என அந்த நபர் மிரட்டினார். இதுகுறித்து அண்ணாசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளேன். சிலை உள்ளிட்ட கலைப்பொருட்களை 30 ஆண்டுகளாக தான் பராமரித்து வருகிறேன். மிரட்டல் அழைப்பினால் ஏற்பட்ட மனக்குழப்பத்தில் அவற்றை புதைத்து வைத்ததாகவும் கிரண் தெரிவித்துள்ளார். 

மேலும் நான் செய்தது தவறு என்பதை உணர்ந்து கலைப்பொருட்கள் குறித்த விவரத்தை சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவு அதிகாரிகளிடம் தெரிவிக்க எண்ணி இருந்தேன். என்னிடமுள்ள பொருட்களை பட்டியலிட்டு, அவற்றுக்கான ஆவணங்களை காவல்துறையினரிடம் வழங்க உள்ளளேன். என்னிடமுள்ள அனைத்து கலைப்பொருட்களும் விலை கொடுத்து வாங்கப்பட்டவை. நான் புராதனப் பொருட்களை விற்கும் தொழில் செய்யவில்லை. நான் இந்திய கலை, கலாசாரம் மற்றும் தொன்மைக்கு மிகவும் மதிப்பு கொடுப்பவன். சிலைக் கடத்தல் தடுப்புப்பிரிவினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு வழங்க தயாராக உள்ளதாகவும் கிரண் ராவ் தெரிவித்துள்ளார்.