தமிழ்நாடு

"அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்" - சசிகலா

"அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன்" - சசிகலா

webteam

அடக்குமுறைகளுக்கு அடிபணியமாட்டேன் என கிருஷ்ணகிரியில் ஆதரவாளர்கள் மத்தியில் பேசியபோது சசிகலா தெரிவித்தார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் தண்டனை காலத்தை முடித்துக் கொண்டு சசிகலா சென்னை வந்துகொண்டிருக்கிறார். தற்போது கிருஷ்ணகிரி கந்திகுப்பம் அருகே வந்து கொண்டிருக்கிறார். அங்கு அவரது ஆதரவாளர்கள் ஆரவாரத்துடன் வரவேற்பு தெரிவித்து வருகின்றனர்.

அங்கு செய்தியாளர்களை சந்தித்த சசிகலா, “அன்புக்கு நான் அடிமை. தமிழ் பண்புக்கு நான் அடிமை. கொண்ட கொள்கைக்கு நான் அடிமை. தொண்டர்களுக்கு தமிழ் மக்களுக்கும் நான் அடிமை. ஆனால் அடக்குமுறைக்கு நான் அடிபணியமாட்டேன். புரட்சித்தலைவர் நாமம் வாழ்க. புரட்சித்தலைவி நாமம் வாழ்க. அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் வளர்க. 

தொடர்ந்து தீவிர அரசியலில் ஈடுபடுவேன். அதிமுக கட்சி கொடியை பயன்படுத்தக்கூடாது என்பது அவர்களின் பயத்தை காட்டுக்கிறது. ஆட்சியை கைப்பற்றுவது குறித்து நேரில் சந்தித்து விளக்கம் அளிப்பேன். ஜெயலலிதா நினைவிடத்தை மூடியது எதை காட்டுகிறது என்பது மக்களுக்கு தெரியும்.” எனத் தெரிவித்தார்.