தமிழ்நாடு

‘கெத்து’ இல்ல தப்பு: மன்னிப்பு கேட்கும் பேரிகார்ட் பீட்டர்

‘கெத்து’ இல்ல தப்பு: மன்னிப்பு கேட்கும் பேரிகார்ட் பீட்டர்

webteam

புத்தாண்டு அன்று பைக் ரேஸின்போது பேரிகார்டை சாலையில் இழுத்துச்ன்ற பீட்டர் என்ற இளைஞர் மன்னிப்பு கோரியுள்ளார்.

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது போக்குவரத்தை ஒழுங்குப்படுத்தவும், வாகன சோதனைக்காகவும் காவல்துறையால் பயன்படுத்தப்படும் தடுப்பு பலகையை இழுத்துச் சென்றபடி இளைஞர்கள் பைக் ஓட்டிய காட்சி சமூக வலைத்தளங்களில் பரவியது. இந்தச்சம்பவம் சென்னை காமராஜர் சாலையில் நடைப்பெற்றிருப்பது தெரியவந்தது.

இதனையடுத்து காவல்துறையினர் 4 தனிப்படைகள் அமைத்து அந்த இளைஞர்களை தீவிரமாக தேடிவந்தனர். இந்த நிலையில் பேரிகார்ட்டை இழத்து சென்றது பற்றி ஃபேஸ்புக்கில் பீட்டர் என்ற இளைஞர் சுயதம்பட்டமடித்து வீடியோ பதிவிட்டிருந்தார். இதனையடுத்து அவரை காவல்துறையினர் கைது செய்தனர்.

இந்நிலையில் அந்த இளைஞர் மன்னிப்பு கேட்கும் வீடியோ பதிவு ஒன்றை காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். அதில் புத்தாண்டு தினத்தில் நண்பர்களுடன் ஃபீச் ரோட்டில் எனது நண்பர்களுடன் ரேஸ்சில் ஈடுபட்டேன். அப்போது காவல்துறையால் சாலையில் வைக்கப்பட்டிருந்த தடுப்பு பலகையை  கீழே தள்ளி அதனை சாலையில் இழுத்துச் சென்றேன். ‘கெத்து’ என்று நினைத்த  காரியம் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தி உள்ளது என்பதை உணருகிறேன் என பீட்டர் தெரிவித்துள்ளார்.