தாய் மீது இருந்த பாசத்தால் உயிரிழந்த தாயின் நினைவாக வீட்டின் முன்பாக கொத்தனார் மகன் சிலை வைத்துள்ளார்.
குமரி மாவட்டம் அடயாமடை பகுதியைச் சேர்ந்தவர்கள் சோமன் - கனகபாய் தம்பதியர். இவர்களுக்கு இரண்டு மகன்கள்; உள்ள நிலையில், மூத்த மகன் திருமணமாகி தனியாக வசித்து வருகிறார். இந்நிலையில், தம்பதியர் இருவரும் இவர்களது இளைய மகன் மத்தேயுவுடன் வசித்து வந்தனர்.
இந்த நிலையில் மத்தேயு, நோய் பாதிப்பு ஏற்பட்டு அவதிப்பட்டு வந்த தனது தாய் தந்தையை பேணி காத்து வந்து வந்துள்ளார். ஆனால், கடந்த 2021-ம் ஆண்டு அவரது தாய் உயிரிழந்த நிலையில், தாயாரை அதிகமாக நேசித்த மத்தேயு தனது தாய்க்கு உருவச் சிலையை தனது வீட்டின் முன்பு அமைத்து அந்த சிலையை தினசரி வணங்கி வருகிறார்.
தற்போது பெற்ற தாய் தந்தையை முதியோர் இல்லங்களிலோ காப்பகங்களிலோ சேர்த்து விட்டு மாதம் ஒருமுறை பார்த்து வரும் நிலையில், பாச மகனின் இந்த செயல் பாராட்டக்குறியதாகும். இதுகுறித்து கூலித்தொழிலாளி மத்தேயுவிடம் கேட்டபோது... தனது தாயின் உருவச் சிலையை அவர் உயிருடன் இருக்கும் போதே அமைக்க திட்டமிட்டேன். ஆனால், நிதி நெருக்கடி காரணமாக நிறுவ முடியவில்லை. தற்போது தனது தாய் இறந்து ஒராண்டு ஆன நிலையில், அந்த கனவை நிறைவேற்ற முடிந்தது. நான் கடவுளை விட தனது தாய் தந்தையை கடவுளாக கருதுவதாக கூறினார்.