தமிழ்நாடு

இளையராஜா கருத்து குறித்து என்னுடைய கருத்தை சொல்ல விரும்பவில்லை: ஜெயக்குமார் பதில்

இளையராஜா கருத்து குறித்து என்னுடைய கருத்தை சொல்ல விரும்பவில்லை: ஜெயக்குமார் பதில்

kaleelrahman

தினமும் ரிமோட் எடுப்பது, போஸ் கொடுப்பது ரிபீட்டு என மாநாடு பட பாணியில் முதல்வர் மு.க.ஸ்டாலினின் செயல்பாடுகள் இருப்பதாக முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் விமர்சித்துள்ளார்.

நில அபகரிப்பு வழக்கில் ஜாமீனில் வெளியே வந்த முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நீதிமன்ற உத்தரவுபடி நான்காவது முறையாக இன்று காலை காவல் ஆணையர் அலுவலகத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு வந்தார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த அவர், 'முதல்வர் மு.க.ஸ்டாலின் கட்டுப்பாட்டில் தமிழ்நாடும் இல்லை, காவல்துறையும் இல்லை. சட்டவிரோத செயல்களை கண்டிக்காமல் தினமும் முதல்வர் மு.க.ஸ்டாலின் ரிமோட் எடுத்து திறக்க வேண்டியது, போஸ் கொடுக்க வேண்டியது ரிபீட்டு என்ற முறையில் அவரது செயல்பாடுகள் இருப்பதாக விமர்சனம் செய்தார்.

அரசியல் அமைப்பு சட்டத்திலேயே கருத்து சுதந்திரம் இருக்கிறது. ஆனால், தமிழகத்தில் கருத்து சுதந்திரம் இல்லை. இளையராஜா அவருடைய கருத்தை சொல்லி இருக்கிறார், அது குறித்து என்னுடைய கருத்தை சொல்ல விரும்பவில்லை. அம்பேத்கர் - மோடி ஒப்பீடு குறித்து எந்த கருத்தும் தெரிவிக்க விரும்பவில்லை.

அரசு அதிகாரிகள் திமுகவினர் சொல்வதை செய்யாதீர்கள். அப்படி செய்தால் கரூரில் 9 அதிகாரிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டது போல செய்யப்படுவார்கள். பலிகடா ஆக்கப்படுவீர்கள்" என அவர் கூறினார்.