தமிழ்நாடு

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்க ஒப்பந்தம்

webteam

தமிழகத்தின் 3 இடங்கள் உட்பட நாட்டின் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டத்திற்கு ஒப்பந்தம் செய்யப்படுகிறது.

தமிழகத்தில் 3 இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுப்பதற்கு ஒப்பந்தம் வழங்கப்படுகிறது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதும் 32 இடங்களில் ஹைட்ரோ கார்பன் எடுக்க ஒப்பந்தம் செய்யப்படுகிறது. மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் முன்னிலையில் தற்போது ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டு வருகிறது. இந்தத் திட்டத்திற்கு தமிழகத்தில் விவசாயிகள் மற்றும் மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில், ஒப்பந்தம் கையெழுத்தாவது குறிப்பிடத்தக்கது. பந்தநல்லூர், புவனகிரி, நன்னிலம் உள்ளிட்ட 3 இடங்களில் ஒப்பந்தத்தின்படி ஹைட்ரோகார்பன் எடுக்கப்படும்.

சில நாட்களுக்கு முன்னர் நாடாளுமன்றத்தில் விளக்கமளித்த அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழகத்தில் ஏற்கெனவே இரண்டு இடங்களில் ஹைட்ரோகார்பன் எடுக்கப்படுகிறது. இதனால் விவசாய நிலங்களுக்கோ அல்லது சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படாது என தெரிவித்திருந்தார்.