நெடுவாசல் மக்களின் சந்தேகங்களை தீர்த்தபின் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இந்தியா முழுவதும் பல்வேறு இடங்களில் ஹைட்ரோகார்பன் திட்டத்தை செயல்ப்படுத்த 31 நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதியளித்து. அந்த நிறுவனங்களுடன் இன்று ஒப்பந்தம் கையெழுத்தாகும் நிலையில், நெடுவாசல் மக்களின் சந்தேகங்களை தீர்த்த பின் ஹைட்ரோகார்பன் திட்டம் செயல்படுத்தப்படும் என்ற விளக்கத்தை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மேலும், ஹைட்ரோகார்பன் திட்டம் குறித்த கிராம மக்களின் சந்தேகங்களை தமிழக அரசு தீர்க்கும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஹைட்ரோகார்பன் திட்டத்தை எதிர்த்து நெடுவாசல் மக்களின் தொடர் போராட்டத்தால், தமிழக அரசு மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் திட்டத்தை கைவிடுமாறு மத்திய அரசை வலியுறுத்தி வருகின்றன. போராட்டத்தில் ஈடுப்பட்ட நெடுவாசல் மக்களை மத்திய அமைச்சர்களையும் சந்தித்தனர். இந்த நிலையில் பெட்ரோலியத்துறை அமைச்சகம் இந்த விளக்கத்தை அளித்துள்ளது.