தமிழ்நாடு

மனைவியின் கல்லறையில் இறந்து கிடந்த கணவர் - என்ன காரணம்?

மனைவியின் கல்லறையில் இறந்து கிடந்த கணவர் - என்ன காரணம்?

webteam

திருவள்ளூரில் மனைவியின் ‌கல்லறையில் சடலமாக கிடந்த கணவனின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக உறவினர்கள் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

திருவள்ளூர் மாவட்டம் கரடிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த அம்பிகாவுக்கும், கொண்டமாநல்லூரில் வசித்த சிவாவுக்கும் 8 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். கடந்த ‌8 மாதங்களுக்கு முன்பு சிறுநீரக கோளாறு காரணமாக அம்பிகா உயிரிழந்தார். இந்த நிலையில், அம்பிகாவின் கல்லறையின் மீது அவரது கணவரான சிவா, இறந்து கிடப்பதாக காவல்நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. 

சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர், சிவா விஷம் அருந்தி உயிரிழந்திருப்பதாக சந்தேகித்தனர். இந்நிலையில், சிவாவின் உடலை எடுக்க விடாமல் அவரது உறவினர்கள் போராட்டம் நடத்தினர். அதனைத் தொடர்ந்து, அம்பிகாவின் சகோதரர்கள் சிவாவை அடித்துக் கொன்றதாகக் கூறி காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். 

இதையடுத்து, அம்பிகாவின் சகோதரர்கள் உள்பட 4‌ பேரையும் காவல்துறையினர்‌ விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். சிவா, அடித்து கொலை செய்யப்பட்டாரா? தற்கொலை செய்து கொண்டாரா? என காவல்துறையினர் விசாரித்து வருகின்றனர்.