தமிழ்நாடு

செங்கல்பட்டு: மழையால் திடீரென இடிந்த அரசு தொகுப்பு வீடு... கணவன் - மனைவிக்கு பலத்த காயம்

செங்கல்பட்டு: மழையால் திடீரென இடிந்த அரசு தொகுப்பு வீடு... கணவன் - மனைவிக்கு பலத்த காயம்

நிவேதா ஜெகராஜா

அரசு தொகுப்பு வீட்டின் தளம் இடிந்து கணவன் - மனைவி மீது விழுந்ததில், ஆபத்தான நிலையில் அவர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

செங்கல்பட்டு மாவட்டம் அச்சிறுப்பாக்கம் அருகே உள்ள இந்தலூர் பெரியார் நகரில், சுமார் 25 ஆண்டுகளுக்கு முன்பு தமிழக அரசால் கிராமத்திற்கு குடிசை மாற்று வாரியத்தால் 21 தொகுப்பு வீடுகள் வழங்கப்பட்டன. அதிலொரு வீட்டில் முருகேசன் (வயது 60) மற்றும் அவரது மனைவி அஞ்சலை (வயது 52) வசித்துவருகின்றனர். இவர்கள் இருவரும் நேற்று இரவு வழக்கம் போல் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது, மழை பெய்துள்ளது. மழை காரணமாக மின்சார துண்டிக்கப்பட்ட நிலையில், இவர்கள் தங்கியிருந்த தொகுப்பு வீட்டின் மேல் கூரை இடிந்து உறங்கிக் கொண்டிருந்தவர்கள் மீது விழுந்துள்ளது.

இதில் முருகேசனுக்கு இரு கால் முறிவு ஏற்பட்டிள்ளது. அவரது மனைவி அஞ்சலி அவருக்கு தலையில் காயம் ஏற்பட்டுள்ளது. இருவரும் படுகாயமடைந்த நிலையில் அவர்களை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். ஆபத்தான நிலையில் இருவரும் உள்ளதால் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விபத்து குறித்து அச்சரப்பாக்கம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.