தமிழ்நாடு

நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து இழுத்து தள்ளிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து இழுத்து தள்ளிய விவகாரம்: மனித உரிமை ஆணையம் நோட்டீஸ்

webteam

கிருஷ்ணகிரி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் நோயாளியை சக்கர நாற்காலியில் இருந்து இழுத்து தள்ளிய விவகாரம் தொடர்பாக மூன்று வாரங்களில் அறிக்கை அளிக்க ஊரக சுகாதார மற்றும் மருத்துவ பணிகள் இயக்குனருக்கு தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்ட தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஒருவரை, மருத்துவமனை ஊழியர் சக்கர நாற்காலியில் இருந்து இடித்து தள்ளியுள்ளார். அதன் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவி வந்தன. இதையடுத்து, அந்த ஊழியரை சஸ்பெண்ட் செய்து மருத்துவமனை நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

இது தொடர்பாக வெளியான செய்தியின் அடிப்படையில் தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணைய உறுப்பினர் சித்தரஞ்சன் மோகன்தாஸ், தாமாக முன்வந்து வழக்கை விசாரணைக்கு எடுத்துக் கொண்டார். இந்த விவகாரம் தொடர்பாக மூன்று வாரங்களில் விரிவான அறிக்கை அளிக்க தமிழக ஊரக சுகாதாரம் மற்றும் மருத்துவ பணிகள் துறை இயக்குனருக்கு மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.