தமிழ்நாடு

மாதவரத்தில் ரசாயன கிடங்கில் பயங்கர தீ விபத்து

jagadeesh

மாதவரத்தில் ரசாயனக் கிடங்கில் ஏற்பட்ட தீயை அணைக்கு முயற்சியில் 10 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.

திருவள்ளூர் மாதவரம் ரவுண்டானா பகுதியில் உள்ள ரசாயனக் கிடங்கில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. இதையடுத்து சம்பவ இடத்துக்கு 10 தீயணைப்பு வாகனங்களில் விரைந்துள்ள 50க்கும் மேற்பட்ட வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர். தீ மளமளவென எரிந்து வருவதால் யாரும் அருகில் செல்லவேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளனர். மேலும் அதிகளவு கரும்புகை எழுவதால் சுற்றியுள்ள குடியிருப்புவாசிகளுக்கு கண் எரிச்சல் ஏற்பட்டுள்ளதாக புகார் தெரிவித்துள்ளனர்.

இப்போது வரை வெறும் தண்ணீரைக் கொண்டு தீயை அணைக்க தீயணைப்பு வீரர்கள் முயற்சி செய்கிறார்கள். ஆனால், ரசாயனம் என்பதால் வெறும் தண்ணீருக்கு தீ அணையவில்லை. ஊற்ற ஊற்ற எரிந்து கொண்டுள்ளது. எனவே ரசாயன நுரையை கொண்டு தீயை அணைக்க கூடிய முறையை கொண்டு தீயை அணைக்க அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க உள்ளனர்.

தீ பிடித்த இடத்தில் இருந்தது எந்த மாதிரி ரசாயனம் என்பது இதுவரை தெரியவில்லை என்பதால் தீயணைக்கும் பணியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. அருகே உள்ள குடியிருப்பு பகுதிகளுக்கு தீ பரவாமல் இருப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அந்த பகுதிகளில் மக்கள் அவசரமாக வெளியேற்றப்பட்டுள்ளனர். மிகக் கடுமையான கரும் புகை மூட்டம் எழுந்து வருவதால் அப்பகுதி மக்களுக்கு கண் எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் ஏற்பட்டு உள்ளது. இந்த சம்பவம் அங்கு பெரும் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. மேலும் போக்குவரத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளது.