தமிழகம் முழுவதும் டெங்குவுக்கு உயிரிழப்புகள் அதிகரித்து வரும் நிலையில், டெங்கு பரவுவதை தடுப்பது எப்படி என்பது குறித்து தெரிந்து கொள்வோம்.
- டெங்குவை பரப்பும் ஏடிஸ் கொசுவானது நல்ல நீரில் முட்டையிட்டு பொறிக்கக் கூடியது.
- நம் வீட்டை சுற்றி நல்ல தண்ணீர் சேமித்து வைக்கும் சட்டி சாமான்களை மூடியிட்டு வைக்க வேண்டும்.
- வீட்டை சுற்றி பழைய டயர், காலி பாட்டில்கள், பேப்பர் கப்கள், சிரட்டைகள், இளநீர் கூடுகள் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்.
- டெங்கு கொசு முட்டையிட 10 மில்லி நல்ல தண்ணீர் போதும் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்
- தங்கள் வீட்டில் உள்ள குளிர்சாதன பெட்டியின் பின்புறம் சேரும் தண்ணீரிலும் அந்த கொசு முட்டையிட்டு வளரும்,
- தண்ணீர் சேமித்து வைக்கும் கலன்களை ப்ளீச்சிங் பவுடர் கொண்டு வாரம் ஒருமுறையேனும் தேய்த்து கழுவ வேண்டும்,
- ஏடிஸ் கொசு பகல் நேரத்தில் மட்டுமே கடிக்கும் கொசு ஆதலால் நம் வீட்டை மட்டும் சுத்தமாக வைத்திருந்தால் போதாது.
- பகல் நேரத்தை செலவிடும் பள்ளிகள், பணிபுரியும் அலுவலகங்கள் சுத்தமாக இருக்க வேண்டும்.
- தண்ணீரை கட்டாயம் காய்ச்சி பருக வேண்டும்.
- மலம் கழித்த பின்னர் கட்டாயம் கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டும்,
- உணவு உண்ணும் முன்னும், சமையல் செய்யும் முன்னும் கட்டாயம் கைகளை சோப் கொண்டு கழுவ வேண்டும்
- கைகளை சோப் கொண்டு கழுவினால் பல நோய் தொற்றுகள் நமக்கு வருவதை தவிர்க்கலாம்.