தமிழ்நாடு

எந்த மாதம் எவ்வளவு நீர் காவிரியில் திறக்கப்படும்?

எந்த மாதம் எவ்வளவு நீர் காவிரியில் திறக்கப்படும்?

webteam

தமிழகத்துக்கு 192 டி.எம்.சி. தண்ணீர் காவிரியில் இருந்து கொடுக்கப்பட வேண்டும் என்று 2007ல் சொன்ன நடுவர் மன்றம்தான் அந்த 192 டிஎம்சி தண்ணீரை மாத வாரியாக எப்படி பிரித்தளிக்க வேண்டும் என்றும் முதன்முறையாக வரையறுத்தது.

ஜூன் மாதத்தில் 10 டிஎம்சி, ஜூலையில் 34 டிஎம்சி, ஆகஸ்ட்டில் 50 டிஎம்சி, செப்டம்பரில் 40 டிஎம்சி, அக்டோபரில் 22 டிஎம்சி, நவம்பரில் 15 டிஎம்சி, டிசம்பரில் 8 டிஎம்சி, ஜனவரி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களில் தலா 2.5 டிஎம்சி என அப்போது நீர்ப் பங்கீடு வரையறுக்கப்பட்டது.

உச்சநீதிமன்றம் தனது இறுதித் தீர்ப்பில் தமிழகத்துக்கான நீர்ப் பங்கீட்டை 177.25 ஆகக் குறைத்த பின்னர் இன்று நடந்த காவிரி ஆணையத்தின் முதல் கூட்டத்தில் தமிழகத்திற்கான மாதவாரி நீர்ப்பங்கீடு மறுவரையறை செய்யப்பட்டது, அதன்படி, ஜூனில் 9.19 டிஎம்சி, ஜூலையில் 31.24 டிஎம்சி, ஆகஸ்டில் 45.95 டிஎம்சி, செப்டம்பரில் 36.76 டிஎம்சி, அக்டோபரில் 20.22 டிஎம்சி, நவம்பரில் 13.78 டிஎம்சி, டிசம்பரில் 7.35 டிஎம்சி, ஜனவரியில் 2.76 டிஎம்சி, பிப்ரவரி, மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் தலா 2.5 டிஎம்சி – நீரை கர்நாடகம் தமிழகத்திற்கு திறக்க வேண்டும் என வரையறுக்கப்பட்டுள்ளது. 

இதனை பேரவையில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உறுதி செய்தார். ஒவ்வொரு மாதமும் இந்த நீரானது 10 நாட்களுக்கு ஒருமுறை கணக்கிடப்பட்டு திறக்கப்படும்.