Ease of Moving Index Twitter
தமிழ்நாடு

சென்னை: பொது போக்குவரத்தை பயன்படுத்துவோர் எத்தனை சதவிகிதம்? ஆய்வில் வெளியான தகவல்!

சென்னையில் பேருந்து, மின்சார ரயில் போன்ற பொது போக்குவரத்தை 50 சதவீத மக்கள் பயன்படுத்துவதாக தனியார் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.

webteam

ஓ.எம்.ஐ. பவுண்டேஷன் எனும் ஆய்வு நிறுவனம், சென்னை ஐஐடி உதவியுடன் நாட்டில் 40 நகரங்களில் போக்குவரத்து குறித்து ஆய்வு மேற்கொண்டது. இது தொடர்பான கருத்தரங்கம் சென்னை ஐஐடியில் நடைபெற்றது.

ஓ.எம்.ஐ. பவுண்டேஷன்

இதில் பங்கேற்ற ஓ.எம்.ஐ. நிறுவனம், சென்னையில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களிடம் நடத்தப்பட்ட ஆய்வில், மாநகரில் பொது போக்குவரத்து பயன்பாடு 50 சதவீதம் மட்டுமே இருப்பதாகவும், 25சதவீதம் பேர் கார், இருசக்கர வாகனம் என தங்களது சொந்த வாகனங்களில் பயணிப்பதாகவும் கூறியது.

அதே சமயம், ஆட்டோ உள்ளிட்ட வாகனங்களை 25 சதவீதம் பேர் பயன்படுத்துவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து சேவையில் சென்னை 15வது இடத்தில் இருப்பதாக கூறியுள்ள ஆய்வு நிறுவனம், மாநகரில் பேருந்து போக்குவரத்து சேவையை அதிகரிக்க வேண்டும் எனக் குறிப்பிட்டுள்ளது.

இதேபோல் சைக்கிளில் செல்வோர், நடந்து செல்வோருக்கான வசதிகளை செய்துதர வேண்டும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது