எப்படி இருக்கிறார் செந்தில் பாலாஜி? மருத்துவமனை வட்டாரங்கள் அளித்த தகவல்கள்:
அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு இதய ரத்த நாளங்களில் வலதுபுறத்தில் அடைப்பு 90% என்றும், இடதுபுறத்தில் 80% என்றும் உள்ளது.
தற்போது ரத்தக் கட்டுகளை தவிர்க்கும் ஹெபாரின் ஊசி அவருக்கு வழங்கப்பட்டு வருகிறது. தற்போது சுயநினைவுடன் இயல்பாக இருந்து வருகிறார். மூன்று இடங்களில் அடைப்பு இருப்பதால் ஸ்டண்ட் பொருத்துவதற்கு பதில் அறுவை சிகிச்சை செய்ய மருத்துவர்கள் பரிந்துரை செய்துள்ளனர். நீதிமன்ற தீர்ப்பை பொருத்து தனியார் மருத்துவமனைக்கு மாற்றமுடியுமா இல்லையா என்பது முடிவு செய்யப்படும்.
ஒருவேளை நீதிமன்றம் அனுமதி வழங்கினால் காவேரி, அப்போலோ - ஆகிய இரு மருத்துவமனைகளள் தயாராக உள்ளன. நீதிமன்ற அனுமதி கிடைக்காவிட்டால் அரசு மருத்துவமனையிலேயே தான் அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். தற்போது உள்ள ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையில் பைபாஸ் அறுவை சிகிச்சை செய்வதற்கான வசதிகள் உள்ளன.
செந்தில் பாலாஜியின் இதயத்துடிப்பு, ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம் உள்ளிட்ட அடிப்படை அளவுகள் சரியாக உள்ளதால் உடல்நிலை சீராக உள்ளது. மருத்துவர்கள் பரிந்துரைத்துள்ள மருந்துகளும் உணவும் வழங்கப்பட்டு வருகிறது.
நீதிமன்ற தீர்ப்பு கிடைத்தால் காவேரி மருத்துவமனைக்கு உடனடியாக மாற்றப்படுவார்.