minister moorthy pt web
தமிழ்நாடு

”ரயில் தீ விபத்து நடக்க இதுதான் காரணம்” - நேரில் ஆய்வு செய்தபின் அமைச்சர் மூர்த்தி பிரத்யேக பேட்டி

மதுரையில் ரயிலில் தீ விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மூர்த்தி விபத்துக் காரணம் என கூறப்படுவது குறித்தும் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்தும் புதியதலைமுறையிடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார்.

Angeshwar G

மதுரை அருகே நிறுத்தி வைக்கப்பட்டிருந்த சுற்றுலா ரயிலில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி இதுவரை 9 பேர் உயிரிழந்துள்ளனர். பலர் படுகாயங்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். ரயிலில் பயணிகள் சிலர் தேநீர் தயாரிக்க கேஸ் சிலிண்டரை பற்றவைத்த போது தீ விபத்து ஏற்பட்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.10 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. மேலும் இது குறித்து விரிவான விசாரணை நடந்து வருவதாகவும் தெரிவித்துள்ளது.

தெற்கு ரயில்வே நிர்வாகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், ரயிலில் இருந்த பயணிகள் சட்டவிரோதமாக எரிவாயு சிலிண்டரை கொண்டு வந்தது தான் இந்த விபத்திற்கு காரணம் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் விபத்து நடந்த இடத்தை நேரில் ஆய்வு மேற்கொண்ட அமைச்சர் மூர்த்தி விபத்துக் காரணம் என கூறப்படுவது குறித்தும் நடைபெற்று வரும் மீட்புப் பணிகள் குறித்தும் புதியதலைமுறையிடம் பிரத்யேகமாக பகிர்ந்து கொண்டார். அவர் கூறியவை அனைத்தும் செய்தியில் இணைக்கப்பட்டுள்ள காணொளியில் உள்ளது