தமிழ்நாடு

நீரில் அடித்துச்சென்ற தற்காலிக பாலம் - கடக்க முடியாமல் தவித்த மாணவர்கள்

நீரில் அடித்துச்சென்ற தற்காலிக பாலம் - கடக்க முடியாமல் தவித்த மாணவர்கள்

webteam

ஓசூர் அருகே கனமழை கார‌ணமாக தற்காலிக பாலம் தண்ணீரில் அடித்துச் சென்றதால், மாணவர்கள் வீட்டிற்கு செல்ல முடியாமல் தவித்தனர். 

கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை அருகே உள்ள அஞ்செட்டி காட்டு பகுதியில் பெய்த பலத்த மழையால், தொட்டல்லா ஆற்றில் திடீர் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இதனால் அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில், தொட்டல்லா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தற்காலிக பாலம் வெள்ளத்தில் நான்காவது முறையாக அடித்து சென்றது. இதனால் அஞ்செட்டி - ஒகேனக்கல் சாலையில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பேருந்து போக்குவரத்து நிறுத்தப்பட்டதால், அஞ்செட்டி அரசு மேல்நிலைப்பள்ளியில் பயிலும் மாணவர்கள் தங்களது வீடுகளுக்கு செல்ல முடியாமல் தவித்தனர். இந்நிலையில் மீண்டும் தற்காலிக பாலம் அமைப்பதை கைவிட்டு நிரந்தர பாலம் அமைத்தால் மட்டுமே அனைவருக்கும் பாதுகாப்பாக இருக்கும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.