குடியிருப்புக்குள் கரடி புகுந்த சிசிடிவி காட்சிகள் வெளியானதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.
ஓசூர் அருகே கர்நாடக எல்லையில் உள்ள ஆனேக்கல் தாலுகா ஜிகினியில், நந்தனவனா லே-அவுட் என்ற குடியிருப்பு பகுதிக்குள் நேற்றிரவு கரடி ஒன்று புகுந்தது. அந்த கரடி வீடுகளையொட்டி சர்வ சாதாரணமாக நடமாடி வருகிறது. இந்த காட்சிகள் அங்குள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி உள்ளன.
குடியிருப்புக்குள் கரடி புகுந்துள்ளதால் அந்த பகுதி பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கரடியின் நடமாட்டம் குறித்து வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த வனத் துறையினர் கரடியை பிடிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இதையடுத்து கரடி புதர்களுக்குள் பதுங்கி இருக்கலாம் என்பதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படி வனத் துறையினர் அறிவுறுத்தி உள்ளனர்.