தமிழ்நாடு

சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பின் விவரம்

சங்கர் ஆணவக் கொலை வழக்கில் தீர்ப்பின் விவரம்

rajakannan

உடுமலைப்பேட்டை சங்கர் ஆணவக்கொலை வழக்கில் கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்பட 8 பேர் குற்றவாளிகள் என திருப்பூர் மாவட்ட வன்கொடுமை தடுப்பு சிறப்பு நீதிமன்ற நீதிபதி அலமேலு நடராஜன் அறிவித்தார். பின்னர், தந்தை சின்னசாமி உள்பட 6 பேருக்கு இரட்டை தூக்கு தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், குற்றவாளிகளுக்கு அடைக்கலம் கொடுத்த குற்றச்சாட்டில் ஒருவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. கவுசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, தாய் மாமன் பாண்டித்துரை உள்ளிட்ட 3 பேர் விடுதலை செய்யப்பட்டனர்.

தீர்ப்பின் விவரம்:-

  • 1வது குற்றவாளியான கவுசல்யாவின் தந்தை சின்னசாமிக்கு இரட்டை தூக்கு தண்டனை, 10 ஆண்டு கடுங்காவல், ரூ.1 லட்சம் அபராதம்
  • 2வது குற்றவாளியான கவுசல்யாவின் தயார் விடுதலை
  • 3வது குற்றவாளியான கவுசல்யாவின் மாமா பாண்டித்துரை விடுதலை
  • 4வது குற்றவாளியான ஜெகதீசனுக்கு மரண தண்டனை
  • 5வது குற்றவாளியான பழனியை சேர்ந்த மணிகண்டனுக்கு மரண தண்டனை
  • 6வது குற்றவாளியான திண்டுக்கல் செல்வகுமாருக்கு மரண தண்டனை
  • 7வது குற்றவாளியான கலை தமிழ்வாணனுக்கு மரண தண்டனை
  • 8வது குற்றவாளியான மதன் என்கிற மைக்கேலுக்கு மரண தண்டனை
  • 9வது குற்றவாளியான ஸ்டீபன் தன்ராஜூக்கு இரட்டை ஆயுள் தண்டனை
  • 10வது குற்றவாளியான கவுசல்யாவின் உறவினர் பிரசன்னா விடுதலை
  • 11வது குற்றவாளியான மணிகண்டனுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை