மழை pt web
தமிழ்நாடு

22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு.. 5 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை... கல்லூரிகளுக்கு?

இன்று சென்னை உட்பட 22 மாவட்டங்களில் காலை 10 மணி வரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

PT WEB

அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் பதிவான வடகிழக்கு பருவ மழை, இயல்பை விட ஒரு விழுக்காடு குறைவு என்றும், வரும் நான்கு நாட்களில் மழை நீடிக்கும் என்றும் தென் மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் நேற்று செய்தியாளர்களைச் சந்திக்கும்போது தெரிவித்தார்.

சென்னைக்கு மிக கனமழை எச்சரிக்கை!

இந்நிலையில், இன்று சென்னை உட்பட 22 மாவட்டங்களில் காலை 10 மணிவரை மிதமான மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதன்படி, சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், திருவாரூர், நாகை, திருச்சி, புதுக்கோட்டை, ஈரோடு, ராமநாதபுரம் உள்ளிட்ட 22 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, கனமழை காரணமாக அரியலூர், கடலூர், பெரம்பலூர் போன்ற மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே மயிலாடுதுறை மற்றும் காரைக்காலில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டிருந்தது.