1951ஆம் ஆண்டில் முதல் மக்களவை தேர்தலை சந்தித்த காஞ்சிபுரம் தொகுதி அதன் பின்னர் நீக்கப்பட்டது. 2008இல் தொகுதி மறுசீரமைப்புக்கு பின் காஞ்சிபுரம் தொகுதி மீண்டும் உருவாக்கப்பட்டது.
இது பட்டியலினத்தவருக்காக ஒதுக்கப்பட்ட தனித்தொகுதியாகும். இத்தொகுதியில் தற்போது செங்கல்பட்டு, திருப்போரூர், செய்யூர், மதுராந்தகம், உத்தரமேரூர், காஞ்சிபுரம் என 6 சட்டப்பேரவை தொகுதிகள் உள்ளன.
இதில் செய்யூரும் மதுராந்தகமும் தனித்தொகுதிகளாகும். காஞ்சிபுரம் தொகுதியில் 2 தொகுதிகள் அம்மாவட்டத்திலிருந்தும் 4 தொகுதிகள் செங்கல்பட்டு மாவட்டத்தில் இருந்தும் இடம் பெற்றுள்ளன.
1951இல் நடைபெற்ற தேர்தலில் காமன்வீல் கட்சியின் ஏ. கிருஷ்ணசாமி வெற்றிபெற்றார். 2009இல் நடந்த தேர்தலில் காங்கிரஸ், 2014 தேர்தலில் அதிமுக, 2019இல் திமுக என முடிவுகள் அமைந்தன.
கடந்த முறை நடந்த தேர்தலில் திமுக வேட்பாளர் செல்வம் 6.84 லட்சம் வாக்குகளை பெற்று வெற்றிபெற்றார். அதிமுகவின் மரகதம் 3.97 லட்சம் வாக்குகளை பெற்றார். நாம் தமிழர் கட்சியின் சிவரஞ்சனி 62 ஆயிரம் வாக்குகளை பெற்றார்.