தமிழ்நாடு

நன்கொடை மறுப்பு ? : பனியன் கம்பெனி மீது இந்து முன்னணியினர் தாக்குதல்

நன்கொடை மறுப்பு ? : பனியன் கம்பெனி மீது இந்து முன்னணியினர் தாக்குதல்

webteam

விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தர மறுத்ததால் பனியன் கம்பெனி மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது.

திருப்பூரில் உள்ள அங்கேரிபாளையம் பகுதியில் செயல்படும் தனியார் பனியன் நிறுவனம் மீது, அப்பகுதியை சேர்ந்த இந்து முன்னனியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பனியன் கம்பெனியின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டது மட்டுமின்றி, ஊழியர்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. தாக்குதல் நடத்தும் கும்பல், கையில் கிடைத்த பைப்களைக் கொண்டு பனியன் கம்பெனி ஊழியர்களை தாக்கியுள்ளனர். 

இந்த தாக்குதல் தொடர்பாக பனியன் கம்பெனி கொடுத்த புகாரின் அடிப்படையில், அனுப்புர்பாளையம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். விநாயகர் சதுர்த்திக்கு நன்கொடை தராததால் தங்கள் மீது இந்து முன்னணியினர் தாக்குதல் நடத்தியதாக பனியன் கம்பெனியை சேர்ந்தவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். மேலும், விநாயகர் சதுர்த்தி விழாவிற்காக ஒரு குழுவிற்கு பணம் தந்து, மற்றொரு குழுவிற்கு பணம் தரவில்லை என்பதால் இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.