கும்பகோணம் அருகே 150 ஆண்டு பழமையான கோயில் நூற்றுக்கும் மேற்பட்ட ஜாக்கிகள் மூலம் இடமாற்றம் செய்யப்பட்டது. இதை கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் சென்றனர்.
கும்பகோணம் அருகே, பாபநாசம் தாலுகா, அம்மாபேட்டையில் 150 ஆண்டுகள் பழமையான நாகத்தி வீரகாளியம்மன் கோயில் உள்ளது. இந்த கோயில் கருவறை மண்டபம், நெடுஞ்சாலை விரிவாக்கப் பணிக்கு இடையூறாக இருந்துள்ளது. இதனால் 150 ஆண்டுகள் பழமையான கோயில் கருவறை மண்டபத்தை இடிக்க மனமில்லாத கிராம மக்கள், மாற்று வழியில் கோயில் கருவறை மண்டபத்தை அகற்ற முடிவு செய்தனர்.
இதனையடுத்து நவீன தொழில் நுட்பத்தில் கட்டடத்தை நகர்த்த முடிவு செய்த கிராம மக்கள், அதற்கான தொழில்நுட்ப வல்லுநர்களை வரவழைத்து கோயில் கருவறை மண்டபத்தை நகர்த்தும் பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். கோயில் கருவறை மண்டபம் நகர்த்தப்பட்டு வருவதை அப்பகுதி கிராம மக்கள் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல்கின்றனர்.