தமிழ்நாடு

இளையராஜாவுக்கே பாடல் உரிமை - உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு

webteam

இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. 

அகி மியூசிக் நிறுவனம், எக்கோ மியூசிக் நிறுவனம் கிரி ட்ரேடர்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் சேர்ந்து இளையராஜா இசையமைத்த பாடல்களை நாங்கள் உரிமம் பெற்று வைத்துள்ளோம். எனவே இளையராஜா தனது பாடல்களை பயன்படுத்தக்கூடாது என எடுத்த முடிவுக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது. இந்த வழக்கை கடந்த ஆண்டு விசாரித்த உயர்நீதிமன்றம் இளையராஜா பாடல்களை பயன்படுத்த இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டிருந்தது.

இதையடுத்து நடத்தப்பட்ட விரிவான விசாரணையை அடுத்து இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், இளையராஜா பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக்கூடாது என விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை உறுதி செய்தது உயர்நீதிமன்றம். மேலும் இளையராஜா ராயல்டி தொகை கேட்பதற்கு தடை விதிக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் நீதிமன்றம் நிராகரித்தது. 

வியாபார நோக்கத்துடன் இளையராஜா பாடல்களை பயன்படுத்தினால் அவரிடம் தகுந்த அனுமதி பெற வேண்டும் எனவும் தியேட்டர்களில் அவரது பாடல்களை பயன்படுத்தி கொள்ளலாம் எனவும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.