2015-ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகும் தமிழக அரசு பாடம் கற்கவில்லை என உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
சென்னையில் விதிமீறல் கட்டடங்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரிய வழக்கு நீதிபதிகள் சத்தியநாராயணன், ஹேமலதா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது 2015ஆம் ஆண்டு பெருவெள்ளத்திற்கு பிறகும் தமிழக அரசு பாடம் கற்கவில்லை என உயர்நீதிமன்றம் அதிருப்தி தெரிவித்தது.
விதிமீறல் கட்டடங்களை இடிக்காத தமிழக அரசு மற்றும் சென்னை மாநகராட்சிக்கு உயர்நீதிமன்றம் கண்டனம் தெரிவித்ததோடு, இதுகுறித்த வழக்கில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஆஜராக வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.