தமிழ்நாடு

மெரினா போராட்டத்துக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்றம்

மெரினா போராட்டத்துக்கு இடைக்கால தடை - உயர்நீதிமன்றம்

webteam

மெரினாவில் போராட்டம் நடத்த உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.

சென்னை மெரினாவில் 90 நாட்கள் போராட்டம் நடத்த அனுமதி வழங்க வேண்டும் என தென்னிந்திய நதிகள் இணைப்பு சங்கத் தலைவர் அய்யாக்கண்ணு உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இதை விசாரித்த நீதிமன்றம், மெரினாவில் ஒருநாள் மட்டும் உண்ணாவிரதம் இருக்க அனுமதி அளித்து உத்தரவிட்டது. இதனை எதிர்த்து அரசு தரப்பில் மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு அவசர வழக்காக இன்று மாலையே விசாரிக்கப்பட்டது. 

விசாரணையின் போது வாதிட்ட அரசு தரப்பு, மெரினாவில் 2017ஆம் ஆண்டு அனுமதியின்றி நடைபெற்ற போராட்டத்திலேயே சிலர் கூடி, பின்னர் அது பெருங்கூட்டமாக மாறியது என தெரிவிக்கப்பட்டது. சென்னையில் போராட்டம் நடத்த 3 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், போராட்டம் நடத்தும் இடத்தை முடிவு செய்யும் அதிகாரம் காவல் ஆணையருக்கே உள்ளது என்றும் வாதிடப்பட்டது. வாதங்களை கேட்ட பிறகு, மெரினாவில் போராட்டம் நடத்த இடைக்கால தடை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டது. மாற்று இடத்தில் உண்ணாவிரதம் இருக்க அய்யாக்கண்ணுவுக்கு அனுமதி தரவேண்டும் எனவும் காவல்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.