தமிழ்நாடு

‘கூகுள் மேப்’ மூலம் கொள்ளையடித்த சாஹியா ரெட்டி கைது

‘கூகுள் மேப்’ மூலம் கொள்ளையடித்த சாஹியா ரெட்டி கைது

webteam

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் கூகுள் மேப் உதவியுடன் செல்வந்தர்களின் வீடுகளை தேடிக் கொள்ளையடித்த சாஹியா ரெட்டி கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த அக்டோபர் 22ஆம் தேதி சென்னை தியாகராய நகரில் அரசு மருத்துவர் பாலாஜி என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து, 15 லட்சம் ரூபாய் மதிப்புள்ள நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இதே போல் நுங்கம்பாக்கம், தேனாம்பேட்டை உள்ளிட்ட இடங்களில் செல்வந்தர் வீடுகளில் கோடிக்கணக்கான ரூபாய் மதிப்பிலான நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது. இந்த வழக்குகளில் தொடர்புடைய முக்கிய குற்றவாளி ஆந்திராவைச் சேர்ந்த சாஹியா ரெட்டி கடந்த ஒன்றாம் தேதி தெலங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கைது செய்யப்பட்டார். அவரது கூட்டாளிகளும் சிக்கினர். 

ஆந்திராவில் இருந்து விமானம் மூலம் சென்னை வரும் சாஹியா ரெட்டி கூகுள் மேப் மூலம் செல்வந்தர்களின் வீடுகளை கண்டறிந்து, ஆட்டோவில் அந்த இடத்திற்குச் சென்று கொள்ளையடித்தது விசாரணையில் தெரியவந்தது. சாஹியா ரெட்டியிடம் இருந்து கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள வைரக் கற்கள் மற்றும் தங்க நகைகள் பறிமுதல் செய்யப்பட்டது. 

இந்த நிலையில் ஐதராபாத் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த சாஹியா ரெட்டி மற்றும் அவரது கூட்டாளி நரேந்திர நாயக் ஆகியோரை, நுங்கம்பாக்கம் காவல்துறையினர் சென்னை அழைத்து வந்துள்ளனர். நுங்கம்பாக்கம் காவல் நிலையத்தில் வைத்து அவர்களிடம் தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது.