தமிழ்நாடு

தமிழ்நாட்டில் கடந்த 3 நிதி ஆண்டுகளில் துறை சார்ந்து செலவிடப்பட்ட தொகை விவரங்கள்

தமிழ்நாட்டில் கடந்த 3 நிதி ஆண்டுகளில் துறை சார்ந்து செலவிடப்பட்ட தொகை விவரங்கள்

JustinDurai
தமிழ்நாட்டில் கடந்த மூன்று நிதி ஆண்டுகளில் துறை சார்ந்து செய்யப்பட்டுள்ள செலவினங்கள் இதோ..
கல்வித்துறைக்கு 2018-19ஆம் நிதி ஆண்டில் 33 ஆயிரத்து 709 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில், 2019-20ஆம் நிதி ஆண்டில் 37 ஆயிரத்து 402 கோடி ரூபாயும், 2020-21ஆம் நிதி ஆண்டில் 41 ஆயிரத்து 626 கோடி ரூபாயும் செலவு செய்யப்பட்டுள்ளது. குடிநீர் விநியோகத்திற்கு 2018-19ஆம் நிதி ஆண்டில் 13 ஆயிரத்து 348 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்டது. கடைசி இரண்டு நிதி ஆண்டுகளில் அதற்கு அதிகமாக கிட்டத்தட்ட ஒரே அளவில் செலவு செய்யப்பட்டுள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நலனுக்காக 2018-19, 2019-20ஆம் நிதி ஆண்டுகளில் ஏறக்குறைய ஒரே அளவில் செலவு செய்யப்பட்ட நிலையில், கடந்த நிதி ஆண்டில் செலவினம் 15 ஆயிரத்து 773 கோடியாக அதிகரித்தது. போக்குவரத்து துறைக்கான செலவினம் கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. சமூக நலன் மற்றும் ஊட்டச்சத்துக்கான செலவினங்கள் 2019-20ஆம் நிதி ஆண்டில் அதிகமான நிலையில், கடந்த நிதி ஆண்டில் 14 ஆயிரத்து 72 கோடி ரூபாயாக குறைந்தது.
காவல்துறைக்கு 2018-19ஆம் நிதி ஆண்டில் 7 ஆயிரத்து 144 கோடி ரூபாய் செலவானது. அடுத்த இரண்டு நிதி ஆண்டுகளில் செலவினம் கிட்டத்தட்ட ஒரே அளவில் இருந்தது. கிராமப்புற வளர்ச்சிக்கு கடந்த மூன்று நிதி ஆண்டுகளாக செலவினம் சீராக குறைந்துள்ளது. நீர்ப்பாசனத்திற்கு 2018-19ஆம் நிதி ஆண்டில் 3 ஆயிரத்து 339 கோடி ரூபாய் செலவு செய்யப்பட்ட நிலையில், 2019-20ஆம் நிதி ஆண்டில் 5 ஆயிரத்து 189 கோடி ரூபாயும், 2020-21ஆம் நிதி ஆண்டில் 6 ஆயிரத்து 342 கோடி ரூபாயும் செலவாகியுள்ளது.