செய்தியாளர்: சே.விவேகானந்தன்
கர்நாடகா, தமிழ்நாடு காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்து வந்த மழை குறைந்ததால், கடந்த ஒரு வாரமாக காவிரி ஆற்றில் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு, நீர்வரத்து சரிந்து, வினாடிக்கு 6500 கன அடியாக இருந்தது. தற்போது மீண்டும் மழை பெய்து வருவதால், மீண்டும் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இன்று காலை நிலவரப்படி நீர்வரத்து வினாடிக்கு 6,500 கன அடியில் இருந்து 14,000 கன அடியாக அதிகரித்துள்ளது.
இதனால் ஒகேனக்கல் பிரதான அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. இதைப் பார்ப்பதற்கு ரம்மியமாக காட்சியளித்து வருகிறது.
காவிரி நீர்பிடிப்பு பகுதியில் மழை பெய்து வருவதால், மீண்டும் நீர்வரத்து படிப்படியாக அதிகரிக்க வாய்ப்பிருப்பதாக மத்திய நீர்வள ஆணைய அலுவலர்கள் தெரிவித்துள்ளனர்.