ராமேஸ்வரம் கனமழை புதியதலைமுறை
தமிழ்நாடு

பாம்பன் பகுதியில் சில மணிநேரத்தில் விடாமல் கொட்டித் தீர்த்த கனமழை.. மேகவெடிப்பு காரணமா?

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மற்றும் அதன் சுற்றுப்பகுதியான மண்டபம், தங்கச்சி மடம், ராமேஸ்வரம் ஆகியப்பகுதிகளில் நேற்று கனமழை கொட்டிதீர்த்தது.

Jayashree A

வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்து வரும் சூழலில், ராமநாதபுரம் மாவட்டம், பாம்பன் மற்றும் அதன் சுற்றுப்பகுதிகளான மண்டபம், தங்கச்சி மடம், ராமேஸ்வரம் ஆகியப்பகுதிகளில் நேற்று கனமழை கொட்டிதீர்த்தது. இம்மழையால் அப்பகுதி மக்கள் கடும்சிரமத்தை எதிர்க்கொண்டனர்.

இந்த கனமழைக்கு காரணம் மேகவெடிப்பு என்கிறார்கள் வானிலையாளர்கள். மேகவெடிப்பு என்றால் என்ன? அது எதனால் வருகிறது என்பதை தனியார் வானியலாளாரான ஹேமசந்திரன் விளக்கம் அளித்துள்ளார் அது என என்பதைப் பார்க்கலாம்.

”தமிழகத்தில் தற்பொழுது ஏற்பட்ட மேக வெடிப்பு பெருமழை ஏற்படுவதற்கு முக்கிய காரணியாக கடல் சார்ந்த அலைகளான, ராஸ்பி அலை மற்றும் மேடன்ஜுனியல் Madden-Julian Oscillation அலைகள்தான் காரணம். இந்த இரு வேறு அலைகள் வங்கக்கடல் பகுதியில் குறிப்பாக இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவிவருவதன் காரணமாக இந்த மேக வெடிப்புப் பெருமழை தமிழகத்தில் கொட்டிதீர்த்தது.

மேகவெடிப்பு

மேகவெடிப்பு என்பது பல்வேறு காரணிகளில் வானிலை நிகழ்வில் பார்க்கக்கூடிய ஒன்று. எதன் அடிப்படையில் மேகவெடிப்பானது வகைப்படுத்தப்படுகிறது என்றால், ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஒருமணி நேரத்தில் பத்து செ.மீக்கும் மேல் மழை பதிவாகும் போது அதை மேகவெடிப்பு மழைப்பொழிவு என்று வகைப்படுத்தப்படுகிறது. இதன் வானிலை காரணிகளாக மலை சார்ந்த பகுதிகளில் கடல் சார்ந்த பகுதிகள் காணப்படும்.

மழை - தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமசந்திரன்

அதன்படி நேற்றைய தினம் ராமேஸ்வரத்தை அடுத்துள்ள பாம்பன் பகுதியில் மேகவெடிப்பு ஏற்பட்டது. இலங்கையையும் அதனை ஒட்டிய கடலோரப்பகுதிகளில் நிலவிய காற்றுச் சுழற்சியின் விளைவாக அதாவது வறண்ட வடக்கு, வடகிழக்கு காற்றும் ஈரப்பதம் மிகுந்த கிழக்கு திசைக்காற்று என இரு வேறு காற்று குவிதல் ராமேஸ்வரம் பகுதியில் குறிப்பிட்ட குறுகிய நேரத்தில் இந்த காற்றானது வீசியதால் அங்கு மேகவெடிப்பு ஏற்பட்டு கிட்டத்தட்ட 44 செ.மீ மழை பதிவாகியுள்ளது” என்றார்.